காயப்பட்டவர்களுக்கான தமிழ் பேசும் வழக்கறிஞர்கள்
நாங்கள் காயப்பட்டவர்களையும், காப்புறுதி மற்றும் இயலாமை ஆகியவற்றையும் மையமாகக் கொண்டு அட்லாண்டிக் கனடா முழுவதும் செயல்படும் ஒரு சட்ட நிறுவனமாகும். அட்லாண்டிக் கனடா முழுவதும் விபத்தில் காயமடைந்த அல்லது இயலாமைக்குரிய நலன்கள் மறுக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் உதவுகின்றோம்.
நீங்கள் ஒரு விபத்தில் காயமடைந்தால் அல்லது இயலாமைக்குரிய நன்மைகள் உங்களுக்கு மறுக்கப்பட்டால், எங்கள் சட்ட நிறுவனத்துடன் பணிபுரிவது உங்களுக்குத் தகுதியான தீர்வு பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த உதவும்.
உங்களுக்கு MacGillivray Injury Law ஏன் தேவைப்படும்
MacGillivray Injury Law, தனது நிறுவனத்தின் 30 ஆண்டு கால வரலாற்றில், தமது வாடிக்கையாளர்களுக்குத் தொழில்முறையான சட்ட சேவையை வழங்குவதற்காக அதன் செயல்முறைகளைச் சீர்ப்படுத்தியுள்ளது. MacGillivray Law, காயப்படுதல் மற்றும் காப்புறுதி ஆகியவற்றை மையப்படுத்தி இயங்குவதால், எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும், செயல்முறை எவ்வளவு சவாலானது மற்றும் மன அழுத்தம் நிறைந்தது என்பதையும் நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம். எங்கள் பல தசாப்த கால அனுபவமானது, எமது வாடிக்கையாளர்கள் தாம் காயமடையும் சந்தர்ப்பத்தின் போது எதிர்கொள்ளக்கூடிய சில மன அழுத்தம் மற்றும் கஷ்டங்களை விடுவிக்கும் வகையில் எங்கள் செயல்முறைகளை வடிவமைத்துள்ளது.
MacGillivray Law சட்ட உலகில் ஒரு தொழில்நுட்ப முன்னோடியாகும். எங்கள் குழு அதிநவீன கோப்பு மேலாண்மை மற்றும் பயனர் தகவற் தொடர்பு சாதனங்களைக் கொண்டுள்ளது, நாங்கள் உள்ளகத் தாமதங்களை ஏற்படுத்தாமல், உங்களிலும் உங்கள் கோரிக்கை மீதும் கவனம் செலுத்த முடியும் என்பதை அது உறுதிப்படுத்துகிறது.
கார் விபத்தில் காயமடைந்த உடனேயே ஒரு வழக்கறிஞரைத் தக்கவைத்துக்கொள்வதில் நன்மைகள் உள்ளன. இது உங்கள் வழக்கை விரைவுபடுத்தலாம், வழக்கறிஞர் சரியான நிபுணர்களை ஈடுபடுத்தலாம், வாக்குமூலங்களை வழங்கும்போது உங்கள் உரிமைகளைப் பாதுகாக்கலாம், மருத்துவ சிகிச்சைக்கான பாதுகாப்பைப் பெற உதவலாம், செயல்பாட்டின் போது மன அமைதியை வழங்கலாம் மற்றும் நியாயமான அதிகபட்ச இழப்பீட்டைப் பெறுவதற்கான ஆற்றலை உங்களுக்கு வழங்கலாம்.
- வேகம்: காப்புறுதி நிறுவனங்களுக்கு அவர்களுக்கென ஒரு நேரம் உள்ளது, அதே நேரத்தில் காயமடைந்த நபருக்கு நிதி அழுத்தங்களை எளிதாக்குவதற்கு விரைவான தீர்வு தேவைப்படலாம்.
- நிபுணரின் ஆதாரங்கள்: எளிமையான சந்தர்ப்பங்களில் கூட, காயமடைந்த நபர் ஒருவர், மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை வழங்குநர்களிடமிருந்து ஒரு நீதிபதிக்குத் தேவைப்படும் ஆதாரங்களை வழங்க வேண்டியிருக்கலாம். மிகவும் கடுமையான காயங்கள் ஏற்பட்டால், காயமடைந்த நபருக்கு மருத்துவ நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட நிபுணர்களிடமிருந்து கருத்துகள் தேவைப்படலாம், உங்களுக்குக் கிடைக்க வேண்டியது உங்களுக்குத் தரப்படுவதை நியாயப்படுத்த நடுவர் கோப்பில் அவை இருக்க வேண்டும். ஒரு நல்ல வழக்கறிஞர் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிவார், உங்களுக்காக இந்த அறிக்கைகளைச் சேகரிப்பதற்கான செலவுக்கு நிதியளிப்பார்.
- வாக்குமூலங்கள்: நீங்கள் சொல்லும் விடயங்கள் அல்லது கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் விதம் ஆகியன சூழலுக்கு வெளியே எடுக்கப்பட்டுப் பின்னர் உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம். ஒரு வழக்கறிஞரின் உதவியுடன், பொதுவான ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கும், உங்கள் வாக்குமூலங் கள் தெளிவாக இருப்பதையும், தவறாகப் புரிந்துகொள்ளப்படாது என்பதையும் உறுதிப்படுத்த உங்களுக்கு ஆதரவு இருக்கும்.
- மருத்துவ சிகிச்சை: உங்கள் வழக்கு மற்றும் உங்கள் மீட்சிக்கு மருத்துவ சிகிச்சை முக்கியமானது. உங்கள் சேதங்களைத் தணிக்க அல்லது குணமடைய முயற்சிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது, எனவே மருத்துவ சிகிச்சை மற்றும் உதவிகளுக்கு உங்கள் மருத்துவக் குழுவின் பரிந்துரைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். சில நேரங்களில், உங்கள் சொந்தக் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து சிகிச்சைக்குரிய நிதி பெறுவது கடினமாகும். உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு அவர்கள் சரியாக நிதியளிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த உங்கள் சொந்தக் காப்புறுதி நிறுவனத்தை ஊக்குவிப்பதற்கான உத்திகள் ஒரு நல்ல வழக்கறிஞரிடம் உள்ளன.
- மன அமைதி: கார் விபத்துக்குரிய காப்புறுதித் தொகையுடன் தொடர்பான திருப்பங்கள், நெளிவு சுழிவுகள் மற்றும் நுணுக்கங்கள் உள்ளன. உங்கள் குறிப்பிட்டசூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதும், அவற்றுக்குரிய சட்டத்தைப் பயன்படுத்துவதும் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பெற்றுத் தருவதும் உங்கள் வழக்கறிஞரின் வேலையாகும். வழக்கறிஞர் காலக்கெடுவைக் கண்காணிக்க வேண்டும் மற்றும் எதுவும் தவறவிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒரு நல்ல சட்டக் குழு இங்கு உள்ளது, எனவே உங்களுக்குரிய அடிப்படை விடயங்கள் பாதுகாக்கப்படுவதையும் நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
- அதிகபட்ச இழப்பீட்டைக் கோரும் ஆற்றல் (Leverage): நீங்கள் காப்புறுதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, ஒரு வழக்கறிஞரை நியமிப்பதாக அச்சுறுத்துவதன் மூலம் உங்களுக்கு அதிகபட்ச இழப்பீட்டைக் கோரும் ஆற்றல் இருப்பதாக நீங்கள் உணரலாம். உங்கள் வழக்கை நீங்கள் துல்லியமாக மதிப்பிட முடிந்தாலும், ஒரு வழக்கறிஞரைப் பணியமர்த்தும் அச்சுறுத்தல் மட்டும் போதாது. அதிகபட்ச இழப்பீட்டைப் பெறுவதற்கு, வழக்கு சரியான ஆதாரங்களுடன் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும், இதனால் காப்புறுதியைச் சரிசெய்யும் பணியாளர் (adjuster) அவரை மேற்பார்வையிடும் காப்புறுதி நிர்வாகிகளுக்கு அந்தத் தீர்வை நியாயப்படுத்த முடியும். ஒரு வழக்கறிஞரைப் பணியமர்த்துவதற்கான அச்சுறுத்தல் என்பது காப்புறுதி நிறுவனம் அதிகமாகக் கவலைப்படாத ஒரு மென்மையான அச்சுறுத்தலாகும். ஆதாரங்களை உருவாக்கி, நியாயமான தீர்வைப் பெற உதவும் செயல்முறையைப் பயன்படுத்தக்கூடிய ஒரு வழக்கறிஞரைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
சகாக்களின் அங்கீகாரம்
எங்கள் சகாக்களிடமிருந்து கிடைக்கும் விருதுகள், நாங்கள் அட்லாண்டிக் கனடாவில் முன்னணி வகிக்கும் காயமடைந்த தனிநபர்களுக்கான வழக்கறிஞர்கள் என்பதை நிரூபிக்கின்றன.
எங்கள் அணியினர்
MacGillivray சட்ட நிறுவனத்தில், எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொழில்முறையான புரிந்துணர்வுடன் கூடிய சட்ட சேவைகளை வழங்குவதற்காக 34 வழக்கறிஞர்கள், 26 துணைச் சட்ட வல்லுநர்கள் மற்றும் 51 ஆதரவு ஊழியர்களின் குழு ஒன்றிணைந்து செயல்படுகிறது. மொத்தத்தில், 2023 இல் 1,500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதை எங்கள் குழு உறுதி செய்துள்ளது.
எங்கள் அணியினர் தமிழ் மொழி உட்பட 12 மொழிகளில் பேசுகின்றனர். உங்கள் மொழியைப் பேசக் கூடிய, உங்களைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு சட்டக் குழு உங்களுக்கு உள்ளது என்பதை அறிந்து நீங்கள் ஆசுவாசமாக உணரலாம்.
ஆலோசனைகள் இலவசம்.
எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லாமல் உங்கள் சட்டத் தெரிவுகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால், இலவச ஆலோசனையை ஒழுங்குபடுத்த இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் முற்பணம் செலுத்தத் தேவையில்லை.
உங்கள் கோரிக்கையில் சாதகமான முடிவை எட்டினால் மட்டுமே எங்களுக்குப் பணம் கிடைக்கும். விகிதாரச் செலவுக் கட்டணம் (contingency fee) என்பது வென்றெடுக்கும் தீர்வுக் கொடுப்பனவிலிருந்து செலுத்துவதற்காக ஒப்புக்கொள்ளப்படும் சதவீதத் தொகையாகும்.
முதலாவது படிநிலை என்ன?
தக்கவைக்கப்பட்ட பிறகு, உங்கள் கோப்பிற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களையும் நாங்கள் சேகரிப்போம். உங்கள் வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம், அத்துடன் உரிமைகோரலைத் தாக்கல் செய்யும் நபர்கள் மற்றும்/அல்லது நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்பு கொள்வோம்.
Request a
Free Consultation
If you would like to learn your legal options at no obligation, contact us today to set up a free consultation.